சொல்லாக்கம் மற்றும் பாவனை
De persoon die dit onderwerp heeft geplaatst: Mohammed Fahim
Mohammed Fahim
Mohammed Fahim  Identity Verified
Sri Lanka
Lid 2010
Engels naar Tamil
+ ...
Apr 11, 2010

வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கும்போது தமிழில் உள்ள பல்வேறு சொற்களும் ஒரே மாதிரியான கருத்தைத் தாங்கி வருகின்றன. சிலவேளைகளில் அச்சொற்கள் வேறு கோணங்களில் நோக்கப்பட்டு வி... See more
வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கும்போது தமிழில் உள்ள பல்வேறு சொற்களும் ஒரே மாதிரியான கருத்தைத் தாங்கி வருகின்றன. சிலவேளைகளில் அச்சொற்கள் வேறு கோணங்களில் நோக்கப்பட்டு வித்தியாசமான கருத்துக்கள் கூறப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறான நிலைமைகளில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் உரைகளில் நாம் முடிந்தளவு தூய தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்பதே எனது கொள்கை. வடமொழிச் சொற்கள், ஆங்கிலச் சொற்கள் முதலான பிற மொழிச் சொற்களைத் தவிர்த்துக்கொள்வதால் நாம் தமிழ் மொழியின் தூய்மையைப் பாதுகாக்க முனையலாம். அன்றாடப் பாவனைச் சொற்கள் முதல் தமிழில் வழங்கப்படும் ஏராளமான கலைச் சொற்கள் விடயத்திலும் நாம் இவ்வாறு தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதே நலம்.

மேலும், இவ்வாறான நிலைமைகளில் இந்திய, இலங்கை வேறுபாடுகளைத் தவிர்த்து, பொதுவான சொற்களைக் கையாளுதல் சிறந்ததென நினைக்கிறேன். இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
Collapse


 
saifulbajoe
saifulbajoe
Local time: 18:52
Maleis naar Engels
+ ...
எனது தாழ்மையான கருத்து Jan 25, 2011

எனது கருத்து என்னவென்றால், நமது குறிக்கோள் :
அ) தூய தமிழை வளர்ப்பதா? அல்லது
ஆ) படிப்பவர்கள் புரிந்துகொள்ளும்படி மொழிபெயர்ப்பதா?

தூய தமிழ் சொற்களைத் தேடியெடுத்து மொழிபெயர்த்துத
... See more
எனது கருத்து என்னவென்றால், நமது குறிக்கோள் :
அ) தூய தமிழை வளர்ப்பதா? அல்லது
ஆ) படிப்பவர்கள் புரிந்துகொள்ளும்படி மொழிபெயர்ப்பதா?

தூய தமிழ் சொற்களைத் தேடியெடுத்து மொழிபெயர்த்துத் தந்தால் படிப்பவர்கள் புரிந்து கொள்ளாமல் போனால் மொழிபெயர்ப்பதில் நாம் தோல்வி கண்டோம் என்றாகாதா?

பயன்பாட்டில் இருக்கும் தமிழ் மொழியில் வடமொழி, ஆன்ஙில மொழி, மற்ற இன மொழி இவை கலந்தே பேசவும் புழங்கவும் படுகின்றன. இப்படி இருக்கையில் தூய தமிழ் மொழியில் தான் நான் மொழிபெயர்ப்பேன் என்று பிடிவாதம் பிடித்தால் என்னவாகும்?

உதாரணமாக கீழ்காணும் ஆங்கிலச் சொற்றொடரை எடுத்துக் கொள்வோம்.
Please type your email address and press submit button. A note will be sent. When you receive it you will be able to chose a new password for your account.

இதனை தூய தமிழில் மொழிபெயர்த்தேனென்றால்:
தயவு செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். அதற்கு ஒரு குறிப்பு அனுப்பப்படும். இது கிடைத்ததும் நீங்கள் உங்கள் கணக்கிற்கான புதிய கடவுச்சொல் ஒன்றைத் தெரிவு செய்ய முடியும்.

சாதாரண இன்றைய கலப்பு தமிழில் மொழிபெயர்த்தேனென்றால்:
தயவு செய்து உங்கள் ஈமெயிலை டைப் செய்து சப்மிட் பட்டனை அமுக்கவும். ஒரு குறிப்பு அனுப்பப் படும். அது கிடைத்ததும் உங்கள் புதிய பாஸ்வோர்டை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த இரண்டில் எது படிப்பவருக்குப் புரியும்? நிச்சயமாக இரண்டாவது தான். இந்த இரண்டாவது மொழியில் தான் நம்மவர்கள் உரையாடுகிறார்கள். ஆகவே நாம் மிதமாகத் தான் அணுகவேண்டும். புரிந்துகொள்ள மிகக் கடினமான தூய தமிழ் சொற்களைப் பயன்படுத்தினால் மொழிபெயர்ப்பு வீணாகிவிடும், பயன்படாமல் போய்விடும்.

படிப்பவர்கள் யார் என்று அறிந்து கொண்டு மொழிபெயர்த்தால் நல்லது. படிப்பவர்கள் சாதாரணத் தொழிலாளிகள் என்றால் அவர்களுக்கு தூய தமிழ் புரியாது. படிப்பவர்கள் தமிழ்ப் பேராசிரியர்கள் என்றால் தூய தமிழை அவர்களோடு சேர்ந்து நாமும் வளர்க்கலாம். இது எனது தாழ்மையான கருத்து.
Collapse


 


We hebben geen speciale moderator aangesteld voor dit forum.
Wanneer u overtredingen van de sitevoorschriften wilt melden of hulp wilt hebben, neem dan contact op met ProZ.com-medewerkers »


சொல்லாக்கம் மற்றும் பாவனை


Translation news in Indonesië





Protemos translation business management system
Create your account in minutes, and start working! 3-month trial for agencies, and free for freelancers!

The system lets you keep client/vendor database, with contacts and rates, manage projects and assign jobs to vendors, issue invoices, track payments, store and manage project files, generate business reports on turnover profit per client/manager etc.

More info »
Trados Business Manager Lite
Create customer quotes and invoices from within Trados Studio

Trados Business Manager Lite helps to simplify and speed up some of the daily tasks, such as invoicing and reporting, associated with running your freelance translation business.

More info »